காரமடை அருகே வனப்பகுதியில் ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது
காரமடை அருகே வனப்பகுதியில் ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
காரமடை அருகே வனப்பகுதியில் ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வனத்துறையினர் ரோந்து
கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனப்பகுதியையொட்டி வசித்து வரும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து வனத்துறை காவலர்கள் மற்றும் ஊழியர்கள் அடிக்கடி வனப்பகுதிகளில் ரோந்து சென்று வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காரமடை வனப்பகுதியில் மானார் என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு வனக்காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.
சிறுத்தை இறந்து கிடந்தது
அப்போது போட்டுகடவு அருகே உள்ள பசுங்கனி மேடு என்ற இடத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வன ஊழியர்கள் துர்நாற்றம் வந்த இடத்துக்குசென்று பார்த்தனர்.
அப்போது அங்கு சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த சிறுத்தையை அங்கு வைத்தே பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதியில் இறந்து கிடந்தது 5 வயது ஆண் சிறுத்தை. இறந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம். மற்ற விலங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிறுத்தை இறந்ததா? அல்லது உடல்நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story