வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை


வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2021 11:38 PM IST (Updated: 10 April 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அனுப்பர்பாளையம்
அவினாசி அருகே வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வடமாநில பெண்
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தரி ஹீக்கர் வயது 40. இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தேவராயம்பாளையத்தில் தங்கி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் மேற்கு வங்கத்தில் வசித்து வருகிறார். இவர் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார். 
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுந்தரி ஹீக்கர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வலியால் அலறி துடித்தார். 
சாவு
 அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சுந்தரி  ஹீக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார் சுந்தரி ஹீக்கர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story