கத்தரிக்கோல் குத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு


கத்தரிக்கோல் குத்தில் காயமடைந்த  தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 April 2021 11:47 PM IST (Updated: 10 April 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கத்தரிக்கோல் குத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார்.

வாய்மேடு;
வேதாரண்யம் அருகே கத்தரிக்கோல் குத்தில் காயமடைந்த   தொழிலாளி உயிரிழந்தார். 
தொழிலாளி 
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சாக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(வயது45). தொழிலாளி. 
சம்பவத்தன்று இரவு அன்பழகன் தாணிக்கோட்டம் கடை தெருவில் நின்று கொண்டிருந்தார்.  அங்கு தகட்டூர் செட்டியக்காடு பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கார்த்திக்(35) தனது நண்பர் பீட்டருடன்(30) வந்தார். அப்போது கார்த்திக் திடீரென அருகில் உள்ள கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அன்பழகனை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. உடனே சம்பவ இடத்தில் இருந்து கார்த்திக்கும், பீட்டரும் தப்பி சென்று விட்டனர். 
2 பேருக்கு வலைவீச்சு
கத்தரிக்கோலால் குத்தப்பட்டதில் ரத்து வெள்ளத்தில் சரிந்து விழுந்த அன்பழகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக  திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அன்பழகன் இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கார்த்திக், பீட்டர் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் பிடிபட்டால் தான் அன்ழகன் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 
கொலை செய்யப்பட்ட அன்பழகனுக்கு அன்னலட்சுமி(40) என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story