திருச்செங்கோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது


திருச்செங்கோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 10 April 2021 11:57 PM IST (Updated: 10 April 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது

எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டை அடுத்த வாய்க்கால் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் 34 வயது தறித்தொழிலாளி. இவருடைய மனைவியின் சகோதரி தனது முதல் கணவரை பிரிந்து 2-வது திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வசித்து வந்தார். இவருடைய மகளான 15 வயது சிறுமி, பிளஸ்-2 மாணவர் ஒருவரை காதலித்து வந்தாராம். 
இதனை அறிந்த சிறுமியின் தாய் தனது மகளை திருச்செங்கோடு வாய்க்கால் தோட்டத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அங்கு தனது சித்தி வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமி வசித்து வந்தார். அப்போது தறித்தொழிலாளி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே அவரை தறித்தொழிலாளியின் மனைவி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தறித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
========

Next Story