ஏரிகளில் இருந்து மணல் கடத்தல்; 3 பேர் மீது வழக்கு
ஏரிகளில் இருந்து மணல் கடத்தல் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோக்குடி மற்றும் பொய்யூர் ஏரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவர்களான திருச்சி மாவட்டம் வந்தலை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் மகேந்திரன்(வயது 29), இருதயபுரம் கிராமத்தை சேர்ந்த மார்ட்டின் ஜோசப்(35) மற்றும் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (38) ஆகிய 3 பேர் மீது கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story