திருச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,134 வழக்குகளில் ரூ.13 கோடியே 32 லட்சத்துக்கு சமரச தீர்வு


திருச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,134 வழக்குகளில் ரூ.13 கோடியே 32 லட்சத்துக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 11 April 2021 1:05 AM IST (Updated: 11 April 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,134 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, இதன் மூலம் ரூ.13 கோடியே 32 லட்சம் உரியவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

திருச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில்
1,134 வழக்குகளில் ரூ.13 கோடியே 32 லட்சத்துக்கு சமரச தீர்வு
திருச்சி, 

திருச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,134 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, இதன் மூலம் ரூ.13 கோடியே 32 லட்சம் உரியவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் வழிகாட்டுதல் படி, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் மக்கள் நீதிமன்ற அமர்வை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிதி நிறுவன அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.13 கோடியே 32 லட்சம்

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, லால்குடி, துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நீதிமன்றங்களில் சேர்த்து மொத்தம் 12 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் நிலுவை வழக்குகள், மோட்டார் வாகன மற்றும் நஷ்ட ஈடு வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள் உள்பட மொத்தம் 2,983 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,134 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.13 கோடியே 32 லட்சத்து 16 ஆயிரத்து 53 உரியவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், நீதிபதியுமாகிய விவேகானந்தன் செய்து இருந்தார்.

Related Tags :
Next Story