விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2021 1:10 AM IST (Updated: 11 April 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்,
நரிக்குடி அருகே உள்ள பனைக்குடியை சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மனைவி சரண்யா (வயது24). இவர்களுக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். அழகுமுத்து சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் சங்குவள்ளி வீட்டிற்கு சென்று விட்டார். 
இந்தநிலையில் அங்கு சரண்யாவும், அவரது மகனும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கு வள்ளி, மகள் மற்றும் பேரனை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். 
பின்னர் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ேமல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார். 4 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்த பாட்டிலை கீழே வீசி இருக்கலாம், அதனை எடுத்து சிறுவன் குடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 
இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு சரண்யா குடித்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. 

Next Story