மக்கள் நீதிமன்றம் மூலம் 75 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலம் 75 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி தேசிய மக்கள் நீதிமன்றம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் ராம்கணேஷ், சிந்துமதி ஆகியோர் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்தனர். உரிமையியல் வழக்குகளான வாடகை பிரச்சினை, கொடுக்கல்-வாங்கல், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட 6 வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் மோட்டார் வாகன விபத்து, நஷ்டஈடு, காசோலை மோசடி உள்பட 69 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் அபராதமும் பெறப்பட்டது.
Related Tags :
Next Story