விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2021 2:07 AM IST (Updated: 11 April 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் படுகொலையை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்: 

அரக்கோணம் படுகொலையை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட செயலாளர் ரோக்கஸ்வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருச்சித்தன், முருகன், மார்ட்டின், அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரக்கோணத்தில் சூர்யா, அர்ஜூனன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இதேபோல் பழனி பஸ்நிலைய ரவுண்டானா அருகே திண்டுக்கல் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில், அரக்கோணம் படுகொலையை கண்டித்து கோஷமிட்டனர்.

 இ்தனை தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேர் மீது பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story