இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 11 April 2021 2:10 AM IST (Updated: 11 April 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.

விராலிமலை
விராலிமலை அன்பு நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 58). இவர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்து விட்டு அன்று மதியம் விராலிமலைக்கு வந்து விட்டார். இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்தவர்களிடம் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவர் உடனடியாக விராலிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


Next Story