கோபி அருகே காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை
கோபி அருகே காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்
கோபி அருகே காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம்
கோபி அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 20). இவர் காஞ்சிக் கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை செய்துவந்த தர்மபுரி மாவட்டம் மூதூரைச் சேர்ந்த அரவிந்த் (21) என்பவருடன் காதல் ஏற்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் ஆயிபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். ரேவதி கர்ப்பமானார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுபற்றி தகவல் கிடைத்ததும், சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பமான ரேவதி ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரேவதிக்கும் அரவிந்துக்கும் திருமணமாகி 4 மாதமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story