மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் நிர்வாகம் அறிவிப்பு


மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 April 2021 10:00 AM IST (Updated: 11 April 2021 10:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள், அலுவலர்கள், பறக்கும் படையினர் இந்த பணியில் ஈடுபடுவார்கள். இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Next Story