கோடைவெயில் கொளுத்துகிறது உடன்குடியில் பதநீர் விற்பனை படுஜோர்
உடன்குடி பகுதியில் கோடைவெயில் கொளுத்தி வருவதால், பதநீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
கோடை வெயில்
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி அடங்கிய 18 பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்துகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள மக்கள் வெளியில் வரவே தயங்குகின்றனர். இதனால் அந்த நேரங்களில் பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பதநீர் விற்பனை
உடன்குடியில் செட்டியாபத்து ரோடு, திசையன் விளைரோடு, தாண்டவன்காடு ரோடு மற்றும் பரமன்குறிச்சி மெஞ்ஞானபுரம்
ரோடு ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பதநீர் விற்பனை நடக்கிறது. இந்த பகுதியில் முன்பு மதியம் வரை பதநீர் விற்பனை நடைபெறும். தற்போது அதிகளவில் மக்கள் பதநீர் குடிக்க வருவதால், காலை 11 மணிக்குள்ளாகவே விற்று தீர்ந்து விடுவதாக கூறப்படுகிறது.
கோடை வெயிலை சமாளிக்க ஏராளமான மக்கள் கூட்டமாக சென்று பதநீர் குடிக்கின்றனர். சிலர் வீடுகளில் உள்ள குடும்பத்தினருக்கும் பதநீர் வாங்கிச் செல்கின்றனர். இதைதொடர்ந்து தற்போது உடன்குடி வட்டார பகுதியில் பதநீர் விற்பனை படுஜோராக நடக்கிறது.
Related Tags :
Next Story