திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
அரக்கோணத்தில் 2 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தொகை வழங்கிட வேண்டியும், படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.
மண்டல செயலாளர் தமிழினியன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து, கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் டிலைட்டா, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், ஒன்றிய செயலாளர்கள் சங்கத்தமிழன், தமிழ்வாணன், செந்தில்குமார், பூலான் பாண்டியன், ராஜ்வளவன், சிவகுரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story