நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.7½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை


நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.7½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 11 April 2021 8:26 PM IST (Updated: 11 April 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 24¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7½ லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல்,

நாமக்கல்லில் கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். 
இந்த சந்தையில் நேற்று 21¼ டன் காய்கறிகள் மற்றும் 3½ டன் பழங்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 380-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 2,580 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.10-க்கும், கத்தரி கிலோ ரூ.36-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.24-க்கும், புடலங்காய் கிலோ ரூ.30-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.44-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.28-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.52-க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.26-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.22-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரம் கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று கிலோவுக்கு ரூ.8 குறைந்து ரூ.36-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், அவற்றின் விலை சற்று குறைந்து இருப்பதாகவும் உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story