பட்டிவீரன்பட்டி அருகே காட்டுத்தீ பரவல் தடுப்பு பயிற்சி முகாம்


பட்டிவீரன்பட்டி அருகே காட்டுத்தீ பரவல் தடுப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 11 April 2021 8:36 PM IST (Updated: 11 April 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே காட்டுத்தீ பரவல் தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் கோடை காலத்தில் காட்டுத்தீ பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். இதையடுத்து வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து பயிற்சி மேற்கொண்டனர். 
இதில் தீயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது, காட்டுத்தீ பரவாமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், நிலைய போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story