திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளித்து கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளித்து கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளித்து கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
கட்டுப்பாடுகள்
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையத்தில் காய்கறி மீன் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் ஏராளமானவை உள்ளன. இந்த கடைகளுக்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்த சந்தையில் வழக்கமான நாட்களை விட விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக காணப்படும்.
தற்போது கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள் மற்றும் சந்தைகளுக்கு என ஒரு சில கட்டுப்பாடுகள் வதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தென்னம்பாளையம் காய்கறி, மீன், இறைச்சி சந்தைக்கு ஏராளமானவர்கள் வாகனங்களில் வருவார்கள் என்பதால், சந்தையில் நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், சந்தையின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இதன் பின்னர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
முன்னதாக பல்லடம் ரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர். இதுபோல் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவுறுத்தினர். பொதுமக்களிடம் கொரோனாவின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story