தாராபுரம் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
தாராபுரம் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
தாராபுரம்
தாராபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் மற்றும் போலீசார் நேற்று தாராபுரம் பகுதியில் பொள்ளாச்சி ரோடு, பஸ் நிலையம், பூக்கடை கார்னர், அண்ணா சிலை, உடுமலை ரோடு, அலங்கியம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சாலைகளில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் முகவசம் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை சோதனை செய்தனர்.
இதில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் ரூ.200 விதித்தனர். இருசக்கர வாகனங்களில் முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.300 ம் அபராத தொகையாக வசூலித்தனர். மேலும் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களிலும் இருக்கைகளில் அமரும் அளவுக்கு மட்டுமே பயணிகள் ஏற்றப்பட வேண்டும். இதேபோல் பஸ்நிலையங்களுக்கு வந்து பஸ் ஏறும் பயணிகளுக்கு முககவசம், கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் போலீசார் பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கினர்.
Related Tags :
Next Story