பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 April 2021 10:21 PM IST (Updated: 11 April 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பாரிவள்ளல் வீதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மனைவி சரஸ்வதி (வயது 60). இவர் நேற்று காலை அருகில் உள்ள கடைக்கு காய்கறி வாங்க நடந்து சென்றார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். 

அப்போது சரஸ்வதி தடுமாறி கிழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

 மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story