மளுக்கம்பாறை போலீஸ் நிலையம் முன்பு ரூ.25 லட்சத்தில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தம்


மளுக்கம்பாறை போலீஸ் நிலையம் முன்பு ரூ.25 லட்சத்தில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தம்
x
தினத்தந்தி 11 April 2021 10:26 PM IST (Updated: 11 April 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையில் உள்ள மளுக்கம்பாறை போலீஸ் நிலையம் முன்பு ரூ.25 லட்சத்தில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வால்பாறை,

வால்பாறை அருகே தமிழக-கேரள எல்லையில் மளுக்கம்பாறை உள்ளது. இங்குள்ள இருமாநில சோதனைச்சாவடிகள் வழியாகதான் கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும், தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் செல்கின்றன.

 இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் பல்வேறு இடங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, கேரள மாநில போலீசார் மளுக்கப்பாறை பகுதியில் இருந்த பழைய போலீஸ் நிலையத்தை இடித்து விட்டு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் அதிக வசதிகளுடன் போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. 

இந்த போலீஸ் நிலையத்தில் மாவோஸ்டுகள் நடமாட்டம் கண்காணிப்பு கோபுரம், போலீசார் தங்கும் அறைகள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ள அறைகள் என்று பல்வேறு வசதிகள் உள்ளன.

நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தம்

இந்த நிலையில் மளுக்கப்பாறை போலீஸ் நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை கண்காணிக்கலாம்.

 மேலும், இந்த கேமராவில் பதிவாகும் வாகனங்களின் எண்கள் வைத்து அந்த வாகனத்தில் விவரங்களை அறியும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் வாகனத்தின் ஆயுள் காலம் உள்ளிட்ட அனைத்து தகவலையும் அறிந்து கொள்ளலாம்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாது

இதனால் அந்த வாகனங்களின் மீது போலீசாருக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே வாகனத்தை சோதனை செய்து கொள்ளலாம். இல்லை என்றால் வாகனங்களை சோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. காலவிரயம் தவிர்க்கப்படும். 

இந்த அதிநவீன கண்காணிப்பு கேமராவை தமிழக கேரள எல்லையில் உள்ள தமிழக போலீசாரும் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் வாகன சோதனை பணிகள் எளிதாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story