21 பேருக்கு கொரோனா உறுதி
21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 21 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 741 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 425 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 178 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த 69 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சையின் பயனாக தொற்றில் இருந்து குணமாகி இதர உடல் உபாதைகளுக்காக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் திடீரென்று இறந்து போனார். கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணமடைந்த மூதாட்டி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story