பொள்ளாச்சி பகுதியில் 8,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பொள்ளாச்சி பகுதியில் 8,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடங்கியது. இதற்கிடையில கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள பெரும்பாலும் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆதார் அட்டை மற்றும் அதன் நகல் கொண்டு பதிவு செய்து தடுப்பூசி போடப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
எந்த பாதிப்பும் இல்லை
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி, தெற்கு, வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரைக்கும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 6,768 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 2,400 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 483 பேருக்கும் சேர்த்து மொத்தம் 8,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
வருவாய் துறை அலுவலர்களுக்கு கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story