கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 132 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 459 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர்.
அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இதே நாளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக இருந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story