ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதியில் 30 வயது யானை சாவு
ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க யானை இறந்து கிடந்தது.
பென்னாகரம்,
கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வரத்தொடங்கி உள்ளன. ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது 100-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன.
இந்தநிலையில் ஒகேனக்கல் சின்னாறு முத்துப்பட்டி வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் டாக்டர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் விரைந்து வந்து இறந்து கிடந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சின்னாறு வனப்பகுதியில் குழி தோண்டி யானையை வனத்துறையினர் புதைத்தனர்.
Related Tags :
Next Story