சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு
அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வத்திராயிருப்பு,
அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு வழிபாடு
பங்குனி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் கலந்து கொள்தவற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனா்.
காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
அபிஷேகம்
பங்குனி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னா் சுந்தரமகாலிங்கசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
பக்தர்களின் கூட்டம்
தற்போது கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறை கேட் மதியம் 1 மணி வரை திறந்து இருந்தது. அதன் பிறகு வனத்துறை கேட் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Related Tags :
Next Story