சிவகங்கை மாவட்டத்தில்-கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 239 பேருக்கு கொரோனா -அரசு செயலர் தகவல்


சிவகங்கை மாவட்டத்தில்-கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 239 பேருக்கு கொரோனா -அரசு செயலர் தகவல்
x
தினத்தந்தி 12 April 2021 12:40 AM IST (Updated: 12 April 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 239 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அரசு செயலர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 239 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அரசு செயலர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.'

அரசு செயலர் ஆய்வு

சிவகங்கை மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலராக தமிழக அரசின் அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தங்கியிருந்து மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
அவர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவை பார்வையிட்டார்.பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் உடன் இருந்தார்.
இதை தொடர்ந்து அவர் காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அமராவதிபுதூரில் அமைக்கப்பட்டுள்ள உள்ள கொரோனா சிகிச்சை வழங்குவதற்குரிய சிறப்பு வார்டையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

7,239 பேர் பாதிப்பு

மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவும் நிலை குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை அதிகரித்ததால் அதற்கேற்ப சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளது.
கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 127 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

ஒத்துழைப்பு

அரசு வழிகாட்டுதலின்படி மருத்துவர்களின் ஆலோசனைப்படி பொதுமக்கள் செயல்பட்டால்தான் கொரோனா வைரசை முற்றிலும் ஒழிக்க முடியும். தற்பொழுது மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாக சிவகங்கை உள்ளது. மக்கள் முழுஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கையை மாற்ற முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்து சமூகஇடைவெளியை கடைபிடித்து அரசு வழிகாட்டுதலை பின்பற்றி தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும்போது அதன்மூலம் மற்றவர்களும் தங்களாகவே பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story