கவரிங் நகையை அடகு வைத்தவர் கைது


கவரிங் நகையை அடகு வைத்தவர் கைது
x
தினத்தந்தி 12 April 2021 12:45 AM IST (Updated: 12 April 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கவரிங் நகையை அடகு வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, ஏப்:
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது கவரிங் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சூசை மாணிக்கம் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த பரமானந்தம் (வயது 65) என்பவரை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நிறுவன ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story