மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வீரமங்கலம் அருகே உள்ள வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் 2 பேர் மணல் ஏற்றி வந்தனர். போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் அந்த மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் நாட்டாணி அருகே உள்ள வெள்ளாற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்தவர், அந்த வழியாக வந்த மணமேல்குடி தாசில்தார் ஜமுனா மற்றும் வருவாய் துறையினரை பார்த்ததும் மாட்டுவண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த மாட்டு வண்டியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story