தனுஷ் நடித்த திரைப்படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது


தனுஷ் நடித்த திரைப்படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது
x
தினத்தந்தி 12 April 2021 1:08 AM IST (Updated: 12 April 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ் நடித்த திரைப்படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.


திருச்சி, 
தனுஷ் நடித்த திரைப்படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடி கொண்டு இருக்கிறது. திருச்சி வில்லியம்ஸ்ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகரை சேர்ந்த ஒரு வாலிபர் படத்தை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவர் அந்த படத்தை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டு அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்த தனுஷ் ரசிகர்களான எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த கோபிநாத் (வயது 38), திலீப், செந்தில்குமார், சிவராமன் ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். உடனே அந்த வாலிபரிடம் தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் படம் எடுத்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து வாலிபர் அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து கோபிநாத்தை கைது செய்தனர். இதேபோல் கோபிநாத் கொடுத்த புகாரில் அந்த வாலிபர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் கைதான 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story