மாணவர்களுக்கான தனிநபர் இடைவெளி அவசியம்
பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி வகுப்பறைகளில் தனிநபர் இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர்,
பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி வகுப்பறைகளில் தனிநபர் இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நேரடி வகுப்புகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 3-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் அமர வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் கீழ்கண்ட அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
20 மாணவர்கள்
வகுப்பறைகளில் 20 மாணவர்களுக்கு மேல் அமர வைக்க கூடாது.
வகுப்பறைகளில் 50 சதவீத இருக்கைகள் அல்லது 20 பேருக்கு மிகாமல் மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையால் ஒருவரே பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் கலையரங்கம் உள்ளிட்ட திறந்த வெளிமையங்களில் தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள்அமர வைக்கப்பட வேண்டும்.
அனுமதிக்க கூடாது
அதேபோல் கொரோனா அறிகுறி உள்ளவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது. மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி வளாகங்களில் முககவசம் அணிவது உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் இதில் தவறுகள் ஏற்பட்டால் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே கூடுதல் கவனத்துடன் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story