‘பா.ஜ.க. போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ எல்.முருகன் நம்பிக்கை


‘பா.ஜ.க. போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ எல்.முருகன் நம்பிக்கை
x
தினத்தந்தி 12 April 2021 6:34 PM IST (Updated: 12 April 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சென்றார்.

சென்னை, 

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சென்றார். திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெருமந்தூர் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் இறங்கி இளநீர் அருந்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரக்கோணத்தில் தேர்தல் விரோதம் சம்பந்தமாக 2 பேர் படுகொலை செய்யப்பட்டது நடக்ககூடாத சம்பவமாகும். இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று உறுதியாக ஆட்சி அமைக்கும். பா.ஜனதா கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story