தினசரி 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
தினசரி 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
கோவை
கோவை மாநகராட்சி பகுதியில் தினசரி 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசி வாகனம்
ஒவ்வொரு பகுதியாக சென்று கொரோனா தடுப்பூசி போட நடமாடும் வாகனம் தொடக்க நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒருபகுதியாக பொதுமக்களுக்கு கொரோ னா தடுப்பூசி போட வசதியாக ஒரு மண்டலத்திற்கு 3 நடமாடும் வாகனம் என மொத்தம் 5 மண்டலத்திற்கு 15 வாகனங்கள் அனுப்பப் பட்டு உள்ளது.
அந்த வாகனங்களில் சுகாதார பணியாளர்கள் இருப்பார் கள். அவர்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவார்கள்.
இலக்கு நிர்ணயம்
தற்போது ஒவ்வொரு நகர்ப்புற சுகாதார நிலைங்களிலும் தினசரி 150 முதல் 200 பேருக்கு என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் மூலம் தினசரி 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். வணிக நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் தான் இருக்க வேண்டும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது. மாநகராட்சியில் உள்ள சந்தைகளில் 50 சதவீத கடைகள் தான் இயங்க வேண்டும்.
1500 படுக்கைகள் தயார்
கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் சென்னை மாநகரம் முதலிடத்தில் உள்ளது. கோவையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இலவச தொலைபேசி எண், வாட்ஸ் அப் எண் உள்ளது.
தனியார் நிறுவனங்கள் அழைத்தால் அங்கு சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும். கோவையில் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதை 3 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுளோம்.
பூங்காக்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட குளங்களில் 50 சதவீத மக்கள் நுழைவதை உறுதி செய்வோம். அங்கு பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story