மருத்துவமனைகளில் 5,127 படுக்கை வசதிகள் தயார்


மருத்துவமனைகளில் 5,127 படுக்கை வசதிகள் தயார்
x
தினத்தந்தி 12 April 2021 8:30 PM IST (Updated: 12 April 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைகளில் 5,127 படுக்கை வசதிகள் தயார்

கோவை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 127 படுக்கை வசதி தயாராக உள்ளது என்று கலெக்டர் நாகராஜன் கூறினார்.

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

5,127 படுக்கை வசதிகள் 

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத் தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 5 ஆயிரத்து 127 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 507 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 12 ஆயிரத்து 395 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சிகிச்சை மையங்கள்

கோவை அரசு ஆஸ்பத்திரி இ.எஸ்.ஐ கொடிசியா, மாநகராட்சி மருத்துவ மையங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. 

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த மையங்களில் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளலாம் இதுதவிர தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

கோவையில் கொரோனா சிறப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டு உள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம், காருண்யா சிறப்பு மையம், கொடிசியா உள்ளிட்ட பல்வேறு மையங்களில் சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் கவனம்

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது போல் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். புறநகர் பகுதிகளை விட நகர்புறங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டர் நாகராஜன் கூறும்போது, கோவில் திருவிழாக்கள் தொடர்பாக அரசு விதித்த தடை உத்தரவு கோவை மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும்என்றார்.


Next Story