மாவட்ட செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் + "||" + Distribution of awareness leaflets so as not to cause full curfew again

மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்
திருவாரூரில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
திருவாரூர், 

திருவாரூரில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து திருவாரூர் நகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று குறித்து ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என துண்டு பிரசுரங்களையும் முககவசங்களையும் வழங்கினர்.

மேலும் வர்த்தக நிறுவனங்களில் உள்ளவர்கள், வாடிக்கையாளர்கள் அவசியம் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு செய்தனர். அப்போது திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, நகராட்சி துப்பரவு அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் 947 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளதால் சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் 947 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்
பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்.
3. முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்.
4. தெற்கு ரெயில்வே மூலம் தமிழகம், கேரளாவுக்கு 2,200 டன் ஆக்சிஜன் வினியோகம்
தெற்கு ரெயில்வே மூலம் தமிழகம், கேரளாவுக்கு 2,200 டன் ஆக்சிஜன் வினியோகம்.