உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்


உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில்  குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்
x
தினத்தந்தி 12 April 2021 9:21 PM IST (Updated: 12 April 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்

உடுமலை
உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தை ஒவ்வொரு திங்கள் கிழமையும் கூடுவது வழக்கம். அத்துடன் இந்த வாரச்சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் தினசரி சந்தையும், அதையடுத்து காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளன.
இந்த வாரச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளில், வாகனத்தில் கொண்டு வரப்படும் போது அடிபட்ட காய்கறிகள் போன்ற விற்பனைக்கு உகந்ததல்ல என்று கழிக்கப்படும் காய்கறிகள் மற்றும் அடிபட்ட தக்காளி பழங்கள் ஆகியவை வாரச்சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் கொட்டப்படுகின்றன.
 அவை அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் குவிந்து கிடக்கிறது. அவற்றை நாய்கள் கிளறுகின்றன. அழுகிப்போன காய்கறி கழிவுகளில் உற்பத்தியாகும் புழுக்களை தின்ன காகங்கள் மற்றும் கொக்குகளும் அங்கு இரை தேடுகின்றன. அத்துடன் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அந்த இடத்தில் கொட்டப்படும் காய்கறி கழிவுகள் தேங்காமல், நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று காய்கறி வியாபாரிகளும், காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Next Story