உடுமலை பகுதியில் உற்பத்திச்செலவு கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் பலரும் தக்காளி தோட்டங்களைக் கைவிட்டு வருவதால் விரைவில் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலை பகுதியில் உற்பத்திச்செலவு கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் பலரும் தக்காளி தோட்டங்களைக் கைவிட்டு வருவதால் விரைவில் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் உற்பத்திச்செலவு கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் பலரும் தக்காளி தோட்டங்களைக் கைவிட்டு வருவதால் விரைவில் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கமிஷன் மண்டிகள்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை தினசரி சந்தையில் ஏராளமான கமிஷன் மண்டிகள் செயல்பட்டு வருகிறது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் அவற்றை தினசரி உடுமலை சந்தைக்குக்கொண்டு வந்து கமிஷன் மண்டிகள் மூலம் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநில வியாபாரிகளும் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்து கொண்டு செல்கிறார்கள்.
உற்பத்திச் செலவு கூட
கிடைக்காத நிலை
அதிலும் குறிப்பாக உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் அதிக அளவில் தக்காளி விளைகிறது. இதனால் சென்னை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு உடுமலை தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. ஆனாலும் வரத்து அதிகரிக்கும்போது போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிட்ட சீசனில் ஏற்படுகிறது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலை நீடிக்கிறது. சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ 50-க்கும் குறைவாகவே விற்பனையாகும் அவலம் நீடிக்கிறது. இதனால் உற்பத்திச் செலவு கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு இதனால் தற்போது பல விவசாயிகளும் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.மேலும் ஒருசில விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் தோட்டத்தைக் கைவிட்டுள்ளனர். அத்துடன் ஒருசில விவசாயிகள் தக்காளிச் செடிகளை உழவு ஒட்டி மண்ணுக்கு உரமாக்கும் அவலமும் அரங்கேறியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக தக்காளி விலை அதலபாதாளத்தில் உள்ளதால் விவசாயிகள் புதிதாக தக்காளி சாகுபடி செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விரைவில் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.இந்த சூழலை எதிர்பார்த்து நஷ்டத்திலும் தக்காளிச் செடிகளை முறையாக பராமரித்து வரும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. என்பது அனுபவ விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
Related Tags :
Next Story