இளம்பெண்ணை கடத்திய கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது


இளம்பெண்ணை கடத்திய கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2021 9:42 PM IST (Updated: 12 April 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கடத்திய கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழவந்தான்,
சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்தபோது சிலர் வீடு புகுந்து அவரை கடத்திச் சென்றனர்.
இது குறித்து அந்த இளம்பெண்ணின் தாய் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கோச்சடையைச் சேர்ந்த பாஸ்கர் (21), இவரது மனைவி பவித்ரா (21), பரவையைச் சேர்ந்த பாலகுரு (25), பெத்தானியாபுரம் பிரவீன் (22), சிவசூர்யா (23) மற்றும் சிலர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் பாஸ்கர், பவித்ரா, பிரவீன், சிவசூர்யா ஆகியோரை கைது செய்து வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாலகுரு உள்ளிட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story