கோமாநிலையில் உள்ளவரை அழைத்துவர மனு
கோமாநிலையில் உள்ளவரை அழைத்துவர கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
பரமக்குடி அருகே குளவி பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி விஜயரேகா. இவர் தனது குழந்தைகளுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வெள்ளைச்சாமி சவுதி அரேபியா நாட்டில் ரியாத் என்ற இடத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி உடல்நிலை சரியில்லை என்று ரியாத் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு கடந்த 40 நாட்களாக உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கோமா நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் பணியாற்றிய நிறுவனத்தினரிடம் கேட்டபோது குணமடைந்ததும் அனுப்பி வைப்பதாக கூறி முறையான பதிலளிக்க மறுத்து வருகின்றனர்.
எனது கணவரின் உடல்நிலையில் என்ன பாதிப்பு என்ன நடந்தது என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. எனது கணவரின் நிலை தெரியாமல் நானும் எனது குழந்தைகளும் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம்.
எனது கணவரை அங்கிருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story