தேனி மாவட்டத்தில் முககவசம் அணியாத 3 ஆயிரம் பேருக்கு அபராதம்


தேனி மாவட்டத்தில் முககவசம் அணியாத 3 ஆயிரம் பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 April 2021 10:28 PM IST (Updated: 12 April 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 3 ஆயிரத்து 72 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 16 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 3 ஆயிரத்து 72 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 16 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
இந்தியாவில் கொரோனா 2-வது அலை உருவாகி வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. முக கவசம் அணியாமல் பொது இடங்களில் உலா வருபவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதியில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 315 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.63 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. அதுபோல், சமூக இடைவெளியை பின்பற்றாத 4 பேருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.6 லட்சம் வசூல்
கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் மாவட்டத்தில் முக கவசம் அணியாத 3 ஆயிரத்து 72 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 16 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதுபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத 136 பேரிடம் மொத்தம் ரூ.63 ஆயிரத்து 500 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.
முக கவசம் அணியாத காரணத்துக்காக போலீஸ் உட்கோட்டம் வாரியாக தேனியில் 735 பேர், போடியில் 448 பேர், உத்தமபாளையத்தில் 771 பேர், ஆண்டிப்பட்டியில் 514 பேர், பெரியகுளத்தில் 604 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story