வாகனம் மோதி புள்ளிமான் செத்தது


வாகனம் மோதி புள்ளிமான் செத்தது
x
தினத்தந்தி 12 April 2021 11:48 PM IST (Updated: 12 April 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி புள்ளிமான் செத்தது

பொன்னமராவதி, ஏப்.13-
பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதியில் உள்ள வனப்பகுதியில் புள்ளி மான்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது, வெயில் கொளுத்துவதால் காட்டுப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டன. இதனால் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். நேற்று ஏனாதி  பெரியபாலம் பகுதியில் ஒரு புள்ளிமான் சாலையை கடந்த மறுபக்கம் வந்தது. அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மான்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மான் சம்பவ இடத்திலேயே செத்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மானை பரிசோதனை செய்து, புதைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story