கொரோனா சிகிச்சை மையத்தில் சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு


கொரோனா சிகிச்சை மையத்தில் சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு
x
தினத்தந்தி 12 April 2021 11:56 PM IST (Updated: 12 April 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் கொரோனா சிகி்ச்சை மையத்தில் சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் கொரோனா சிகி்ச்சை மையத்தில் சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் உள்ளன. அங்கு கொரோனா பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி, அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மையத்தை நேரில் பார்வையிட்டு சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-

காய்ச்சல் முகாம்

 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கண்காணிப்பாளர் என்ற முறையில் முழுமையாக ஆய்வு செய்து வருகிறேன். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடாக எண்ணற்ற திட்டங்களை சுகாதாரத்துறையினர், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், ஊராட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை, காவல் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் நிலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடைசி 10 மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் ஒன்று.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. எனினும் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது பொது சுகாதாரத்துறை இணைஇயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் உடனிருந்தார்.

Next Story