முக கவசம் அணியாத 100 பேருக்கு அபராதம்
மூங்கில்துறைப்பட்டில் முக கவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மூங்கில்துறைப்பட்டில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு சுகாதார ஆய்வாளர் பாலசேகர் தலைமை தாங்கினார். இதில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார், சுகாதாரத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story