வாலிபர் கொலையில் நண்பர்கள் 7 பேர் கைது


வாலிபர் கொலையில் நண்பர்கள் 7 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2021 12:37 AM IST (Updated: 13 April 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வாலிபர் கொலையில் நண்பர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, ஏப்
மதுரையில் வாலிபர் கொலையில் நண்பர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் கொலை
மதுரை கூடல்புதூர், சொக்கலிங்கநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 21), மீன் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் அவர் வெட்டுக்காயங்களுடன் கரிசல்குளம் பகுதியில் உள்ள முட்புதருக்குள் பிணமாக கிடந்தார். 
தகவல் அறிந்ததும் கூடல்புதூர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் பிரவீன் குமாருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் கொலைச்சம்பவம் நடந்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று பிரவீன்குமார் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
5 பேர் கைது
இதைத் தொடர்ந்து இந்தக் கொலை தொடர்பாக போலீசார் முருகானந்தம், அய்யங்காளை (21), பூமிநாதன் (20), ராஜேஷ் (20), ராஜா (20), புதின்குகன் (20), அஜித் (23) ஆகிய 7 பேரை பிடித்து கைது செய்தனர்.

Next Story