மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கவசம், வைரகிரீடம் அணிவிப்பு


மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கவசம், வைரகிரீடம் அணிவிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 1:06 AM IST (Updated: 13 April 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கவசம், வைரகிரீடம் அணிவிக்கப்பட்டது.

மதுரை, ஏப்.13-
தமிழ்ப்புத்தாண்டு நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் நாளை அணிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.31 மணி வரையிலும் சாத்துப்படி செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story