விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 April 2021 1:38 AM IST (Updated: 13 April 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 42). விவசாயி. மேலும் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் இவருக்கும், இவரது மனைவி சூர்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெயராமன் நேற்று இரவு ஊருக்கு அருகே ஆற்றங்கரையோரம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story