திருவிழா- கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு இசைக்கலைஞர்கள் கோரிக்கை


திருவிழா- கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு இசைக்கலைஞர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 April 2021 1:40 AM IST (Updated: 13 April 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருவிழா- கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு இசைக்கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமரைக்குளம்:
தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நாடக மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், தமிழக அரசு தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறுமையால் பட்டினியோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் காரணமாகவும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாகவும் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு விதிமுறைகள்படி செயல்பட அனுமதித்துள்ள தமிழக அரசு, எங்கள் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு தடையை நீக்கி, அரசின் நிபந்தனைகளோடு திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் பேரிடர் நிவாரணமாக கலைஞர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கி உதவ வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Next Story