மது விற்ற 5 பேர் கைது


மது விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2021 2:04 AM IST (Updated: 13 April 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் மதுவிற்ற 5 பேைர போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் பி.எஸ்.கே. ஆறுமுகநாடார் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பவுன்ராஜ் (வயது 31) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பவுன்ராஜை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சேனையாபுரம் காலனியை சேர்ந்த லட்சுமணன் மகன் பரமசிவம் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் எம்.புதுபட்டி போலீசார் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக விருதுநகர் செங்குன்றாபுறத்தை சேர்ந்த அய்யனார் (25) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாரனேரி போலீசார் காக்கி வாடன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மாரியப்பன் (53) என்பவரை கைது செய்தனர். சிவகாசி டவுன் சப்-இன்ஸ் பெக்டர் முத்துகுமரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிவகாசி மருதுபாண்டியன் நடுத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (49) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

Next Story