கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 13 April 2021 2:44 AM IST (Updated: 13 April 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 483 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள், வணிகர்கள் முககவசம் அணியவேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ழுழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story