காவேரிப்பட்டணம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜெகதாப் அருகே உள்ள பகுத்தன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காசி (வயது 61). விவசாயி. இவருடைய மகன் நடராஜன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட காசி நேற்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் காசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story