வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையம் ்முழுவதும் 350-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் உள்ளது. மேலும் கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் பார்வையிட்டு கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாட்டு அறையில் வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. நேற்று கலெக்டர் கண்ணன் வாக்கு எண்ணும் மையத்தில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story